ஈழ அகதிகளுக்கு அடைக்கலம் கொடுங்கள் - அடைக்கலநாதன்

இலங்கையில் வாழ முடியாதென்று இந்தியா செல்லும் உறவுகள் தொடர்பில் ஈழ அகதிகளுக்கு உதவுமாறு தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாகவே மக்களுடைய தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பிள்ளைகளுக்கு சரியான முறையில் உணவு கொடுக்க முடியவில்லை. அவ்வாறான ஒரு பிரச்னை நாட்டிலே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு நிமிடமும் உணவு பொருட்களின் விலை உயர்வடைவதனால் அன்றாடம் உழைக்கின்றவர்கள் பட்டினியை எதிர் கொள்கின்ற நிலை உருவாகி இருக்கின்றது. அதனால் இந்தியா செல்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அது தவிர்க்க முடியாதது என்றே கூறுகின்றேன். ஏனென்றால் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கவில்லை என்றால் தாய், தந்தை அடுத்த கட்டம் என்ன செய்வது என்று தான் யோசிப்பார்கள்.

ஆகவே இலங்கையில் பட்டினியால் இறப்பதை விட இந்தியா செல்வது சட்டவிரோத செயற்பாடாக இருந்தாலும் கூட, அவ்வாறான ஒரு செயற்பாட்டை மக்கள் செய்வது அந்த காரணங்களை வைத்து கொண்டு தான். எனவே இந்திய அரசாங்கம் அங்கே வருபவர்களை முகாம்களில் விட்டிருக்கின்றனர் என்று அறிகின்றேன். அந்தவகையில் முதலமைச்சருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

இலங்கையில் வாழமுடியாதென்று இந்தியா வரும் உறவுகளை நீதிமன்றத்தினை அணுக வைத்து சிறப்பு முகாம்களில் அடைக்காது, மக்கள் தங்கியிருக்கின்ற முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நான் முதலமைச்சரிடம் முன் வைக்கின்றேன் என்றார்.

ஈழ அகதிகளுக்கு அடைக்கலம் கொடுங்கள் - அடைக்கலநாதன்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House