இவ்வாண்டுக்குள்  4040 கிராமிய குளங்களை நிர்மாணிப்போம் - சமல் ராஜபக்ஷ

கடந்த இரண்டு வருடங்களில் நாம் ஆரம்பித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து இவ்வருட இறுதிக்குள் இலங்கை முழுவதும் 4040 கிராமிய குளங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

5000 குளக்கட்டுகளை புனரமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகளில் கலந்துக்கொண்ட நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ புதன்கிழமை (30) அலரிமாளிகையில் வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

மொரகஹகந்த நீர்த்தேக்கம் என்பது பிரதமரின் மஹிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்டிருந்த ஒரு திட்டமாகும். அந்தத் திட்டம், நான் நீர்ப்பாசன அமைச்சராக இருந்தபோது, நீர்ப்பாசனத் துறையைச் சேர்ந்த ஏராளமான பொறியாளர்களை அந்தப் பகுதிக்கு வரவழைத்து எல்லாவற்றையும் ஆய்வு செய்து அதற்கான பணிகளை ஆரம்பித்தது எனக்கு நினைவிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தை கையளிக்கும் போது, சுமார் 40 வீதமான அணைக்கட்டுக்கான பணிகள் நிறைவடைந்திருந்தன. தற்போது அப்பணி நிறைவடைந்துள்ளது. களு கங்கை திட்டத்தின் பணிகள் கடந்த அரசாங்கத்தினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இப்போது வடக்கே, வட மத்தியப் பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான பணிகளை 2020-ல் தொடங்க எமக்கு பணிக்கப்பட்டிருந்தது. 2021 ஜனாதிபதியின் தலைமையின் கீழ் வட மத்திய பிரதான கால்வாயின் வேலைகளை ஆரம்பித்தோம். 94 கிமீ நீளமுள்ள பெரிய கால்வாய். இந்த கால்வாய் ஹுருலு கால்வாய்க்கு நீரை கொண்டு செல்வதுடன் அநுராதபுரத்தில் உள்ள நுவர வௌ உட்பட சுமார் 2000 நீர்த்தேக்கங்களுக்கு நீரை வழங்குகிறது. அதேநேரம் வடக்கு மற்றும் திருகோணமலை பகுதிக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

அடுத்ததாக வயம்ப மஹா எல திட்டத்தை கௌரவ பிரதமரின் தலைமையில் ஆரம்பித்தோம். இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அது கல்கமுவ மற்றும் குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களுக்கு நீர் கொண்டு செல்வதற்கு. நான் இரண்டு மாகாண சபைத் தேர்தல்களில் கல்கமுவ பிரதேசத்தில் போட்டியிட்டமையால் சிரமங்களை நான் நன்கு அறிவேன். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்க முடியும்.

அதேபோன்று மஹிந்த சிந்தனையில் தெதுரு ஓயாவை நிர்மாணிப்பதும் இருந்தது. குறுகிய காலத்தில் சவால்களை எதிர்கொள்ள முடிந்தது. அதன் பலனை இன்று அப்பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர். நாடு முழுவதும் 103 ஆறுகள் உள்ளன. அந்த ஆறுகளின் அப்பிரதேசத்திற்கு தேவையான நீரை கடலுக்கு அனுப்பாது அப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அணைக்கட்டுகளை அமைத்து அவர்களை வளமாக்குவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.

நேற்று பிலிப் குணவர்தனவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டேன். நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முன்னாள் பொறியியலாளர் திரு. அன்டன் நாணயக்கார களனி நதி தொடர்பில் விரிவுரை ஆற்றினார். 1958 ஆம் ஆண்டு களனி, மகாவலி மற்றும் வளவே ஆகிய ஆறுகளை அபிவிருத்தி செய்வதற்கும் ஆய்வு செய்வதற்கும் அரசாங்கம் 1958 இல் மூன்று நாடுகளை நியமித்தது. களனி ஆற்று நீரை வடமேல் மாகாணம் மற்றும் குருநாகல் மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. திட்டமிடப்பட்டது. ஆனால் இன்று வரை நடைமுறைப்படுத்த முடியவில்லை. மகாவலி போன்று அடுத்த திட்டமாக களனி ஆற்றை வடமேற்கு பகுதிக்கு கொண்டு செல்ல எதிர்பார்க்கிறோம். களனி ஆற்றில் இருந்து வடமேல் மாகாணத்திற்கு தேவையான அனைத்து நீரையும் வழங்க வேண்டும்.

பிரதமர் ஈரானுக்கு விஜயம் செய்த போது, அதன் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை நாங்கள் பெற்றுக் கொண்டோம். இதன் பணிகள் நவம்பர் 2015க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஊவா கீழ் பகுதிக்கு நீரைக் கொண்டு செல்வதன் மூலம் 120 மெகாவொட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இன்று வரை அதை செய்ய முடியவில்லை. 98 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் மே மாதத்திற்குள் உமா ஓயா திட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 120 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

நாம் திட்டமிடுவதைத் தொடர முடிந்தால் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் வராது. அரசாங்கங்கள் மாறுகின்றன. நீண்ட கால வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால், அடுத்து வரும் அரசாங்கம் அதனை தடுத்து நிறுத்தும். அதனால் ஏற்படும் விளைவுகளையும், நஷ்டத்தையும் அடைவது நாடும் மக்களும்தான். இன்றும் அத்தகைய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நெருக்கடிகள் அனைத்தையும் சமாளிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இப்பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு இந்தப் பிரச்சினைகளை முறியடிப்பதற்கும் அவற்றை முறியடிக்க எம்முடன் கைகோர்க்குமாறும் மக்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாண்டுக்குள்  4040 கிராமிய குளங்களை நிர்மாணிப்போம் - சமல் ராஜபக்ஷ

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House