இரத்ததான முகாம்

நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகத்தினரால் இரத்ததான முகாம் ஒன்று இன்று (ஞாயிறு) நிந்தவூரில் நடைபெற்றது.

கழகத்தின் ஏழாவது தடவையான இந்த இரத்ததான முகாம் கழகத் தலைவரும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினருமான யு. அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.

நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலை அஷ்றப் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த இரத்தான முகாமில் சேகரிக்கப்பட்ட இரத்தம் கல்முனை அஷ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.

பெருந்தொகையான இளைஞர்களும் கழக உறுப்பினர்களும் பொது மக்களும் இந்த முகாமில் இரத்ததானம் செய்தனர்.

தமது கழகத்தின் சமூக சேவைப்பிரிவினால் இந்த முகாம் ஒழுங்கு செய்யப்பட்டதாகவும் கழகம் விளையாட்டுத்துறையோடு மட்டும் நின்றுவிடாது கல்வி மற்றும் பொதுப் பணிகளிலும் சேவையாற்றி வருவதாக தலைவர் ஏ.அஸ்பர் கூறினார்.

அத்துடன் க.பொ.த(உயர்தர) மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புக்களையும் தமது கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடாத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரத்ததான முகாம்

ஏ.எல்.எம்.சலீம்