
posted 8th March 2022

பா. அரியநேத்திரன்
இலங்கை நாட்டு மக்களை இருட்டில் தவிக்க விட்டு, இனவாத ஆட்சி தொடர்கிறது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகச் செயலாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளருமான பா. அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் மின்தடை ஏழு மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
தற்போதைய ஆட்சியைப் பார்த்தால் பரிதாபமாகவே உள்ளது. நாட்டு மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை ஆட்சியாளர்கள் உணரவில்லை. இதற்கு நல்ல உதாரணம், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு என ஊடகங்களில் வரும் செய்திகள் பொய் எனக் கூறியுள்ளார். இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது நாட்டு மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை.
இப்போது எரிபொருள் பற்றாக்குறை. இதனால் மின்துண்டிப்பு தொடராக உள்ளது. தற்போது புதிதாக எரிபொருள் அமைச்சராக பவித்திரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர்களை மாற்றுவதால் மட்டும் நாட்டுக்கு வெளிச்சம் வரும் என நினைப்பது மூடத்தனம்.
உலக நாடுகளிலெல்லாம் கடன் வாங்கி, இனி கடன் வாங்க நாடில்லாத இந்த அரசாங்கம் மக்களை இருட்டுக்குள் வாழவைப்பதுமல்லாமல், பஞ்சம், பட்டினி என மக்கள் மூன்று வேளை உணவு உட்கொள்ள முடியாமல் திண்டாட வைத்துள்ளது.
மேலும், இவ் அரசாங்கத்தில் ஒற்றுமையில்லாத அமைச்சரவை, உண்மைகளை அப்பட்டமாக்கினால், இராணுவ நடவடிக்கை பதவி விலக்கல் என்பன அரசாங்கத்தில் ன் அகராதியில் உள்ளன.
அதையும் விட, தற்போது ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுத் தலைவர் இலங்கை தொடர்பாக அதிருப்தியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். வழமையாகவே பொய் கூறி, பிழைப்பு நடத்தும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பொய் மூட்டைகளுடன் ஜெனிவாவில் களம் இறங்கியுள்ளார். அந்தப் பொய்கள் கடந்த 13 வருடங்களாக கூறிவரும் பொய்கள் என்பதை சர்வதேச சமூகம் இப்போது உணர்ந்துள்ளது.
இந்த வருடம் முடிவதற்குள் இன்னும் பல நெருக்கடிகளுக்கு இன்றைய குடும்ப ஆட்சியாளர்கள் முகம் கொடுக்கும் நிலை ஏற்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House