
posted 28th March 2022
இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்
யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு, நவக்கரியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தூர் மேற்கு, நவகரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 வயது இளைஞரே நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது.
வீட்டு வளவிலிருந்து எவரோ பாய்ந்து வெளியே செல்வதை அவதானித்த இளைஞர் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தார் என்றும், வெளியே சென்ற இளைஞரை வீட்டின் முன்புறம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் துரத்திச் சென்றனர் என்றும் கூறப்படுகின்றது.
அதன்பின்னர் இளைஞர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது அவரது கைபேசி வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த 12ஆம் திகதி இளைஞரின் வீட்டுக்கு வந்து இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் வெட்டுக்காயத்துக்கு உள்ளான இளைஞரின் தந்தை தற்போதும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர் நேற்று பிணையில் வெளியே வந்துள்ளனர் என்று இளைஞரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் சிலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், விசாரணைகளின் பின்னரே மேலதிக தகவல்களைத் தெரிவித்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு
இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சு. ஜெய்சங்கர், இன்று திங்கட்கிழமை மாலையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேசுவார் என்று அறிய வருகின்றது.
பிம்ஸ்ரெக் மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டுக்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மூன்றுநாள் பயணமாக இலங்கை வருகின்றார்.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்்இன்று மாலை 4.30 மணிக்கு சந்தித்துப் பேசுவார் என்று கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் திறப்பு
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இணைந்து திறந்துவைப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை திறப்பு நிகழ்வு நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதற்கான ஒத்திகை நிகழ்வுகள் நேற்று ஞாாயிற்றுக்கிழமை இடம்பெற்றன.
யாழ்ப்பாண கலாசார நிலையம் என்று முன்னர் பெயர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள மொழி ஆர்வலர்கள் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஊடாக யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் என்ற பெயரை பயன்படுத்துமாறு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் என்ற பெயர் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House