ஆன்லைன் மூலம் கல்விகற்ற மாணவன் அகில இலங்கை ரீதியில்  முதல் இடம்
ஆன்லைன் மூலம் கல்விகற்ற மாணவன் அகில இலங்கை ரீதியில்  முதல் இடம்

தமிழ்ச்செல்வன் கஜலக்சன்

எதிர் காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பெற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்தார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில் தனது சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;

நான் சூம் வகுப்பினூடாகவே எனது படிப்பை மேற்கொண்டேன். எனது அம்மா ஆசிரியர். அப்பா வியாபாரம் செய்கிறார். எனது அம்மா மற்றும் அப்பா ஊக்கமளித்ததன் காரணமாகவும் எனது பாடசாலையின் வகுப்பாசிரியர் மற்றும் எனது ஆசிரியர்களின் ஊக்கத்தின் காரணமாகவே இந்த பெரு வெற்றியை பெற முடிந்தது. அத்தோடு எதிர்காலத்தில் நான் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் என்றார்.

ஆன்லைன் மூலம் கல்விகற்ற மாணவன் அகில இலங்கை ரீதியில்  முதல் இடம்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House