அரசின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

“மக்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடுமளவுக்கு அரசு மீதுவெறுப்புணர்வு வளர்ந்துள்ளது” இவ்வாறு, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப், இரா. துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இன்றைய நிலமையுடன் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நிலைமையும் விளக்கி அவர் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இந்த ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;

எரிபொருள், சமையலுக்கான எரிவாயு, பால்மா தட்டுப்பாடு, விவசாயிகளுக்கான உரத்தை இல்லாமலாக்கியமை, அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களின் விலை ஏற்றம், ஒரு சில வியாபாரிகள் பொருட்களின் விலையை விரும்பியபடி விற்பனை செய்கின்றமை, மக்களுக்கு பொருளாதாரச் சுமை, சம்பள அதிகரிப்பின்மை, பொருட்களுக்கு வரிச்சுமை அதிகரித்தல், தேசிய மட்டத்தில் அரசியலில் குழப்பம், அரசு தான் பெற்ற கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் மீளச் செலுத்துமாறு நெருக்கடி, சர்வதேச நாடுகளின் அனுசரனையின்மை இது போன்ற இன்னும் பல நெருக்கடிகளினால் மக்களும் விரக்தி அடைந்து, அரசின் பங்காளியாக உள்ள ஆளும் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் விரக்தி அடைந்துள்ள நிலையில் மக்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடுமளவிற்கு இலங்கை அரசின் செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பித நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந் நிலைமை மட்டக்களப்பு மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. இம் மாவட்டத்தில் கடந்த காலத்தில் மக்கள் யுத்தத்தினாலும், சுனாமியினாலும் அழிந்து அவலப்பட்டது யாவரும் அறிந்ததே.

சில நிறுவனங்கள் கடன்களை கொடுத்து அதிக வட்டியை வசூழித்தல், பெற்றகடனை மீள செலுத்த முடியாத கடன்சுமை, கொரோனாவினாலும், இப்போது பொருட்களின் விலையேற்றம், விவசாயச் செய்கைக்கான யூரியா உரம் இல்லாமல் செய்தமை, இயற்கை சூழல் பாதிப்படையக் கூடியவாறான மண் சுரண்டல், குறிப்பிட்ட வருடங்காளக யானைகளினால் பாதிப்பு இப்படி பல பாதிப்புக்களினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களும் ஒருவேளை உண்ண உணவிற்குக் கூட கையேந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இம் மாவட்டத்தில் பொருளாதாரத்தை நிலை நிறுத்தக் கூடியவாறு பெரிய வளமான வேளாண்மைச் செய்கைக்கான யூரியா உரம் வழங்கும் விடயத்தில் வியாபார நோக்குடனும், சொந்தப் பாவனைக்கெனவும் உற்பத்தி செய்த பாரிய வளத்தையே இம் மக்களுக்கு இல்லாமல் செய்த அரசு இனிமேலாவது எதிர்காலத்தில் நல்ல விடயங்களைச் செய்யப் போகின்றதா?

எனவே இவ் விடயங்களை ஈடு செய்வதற்கு ஆளும் தரப்பினர் வகை கூறுவார்களா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்யப் போகின்றார்கள்? என்ன திட்டத்தை முன் வைக்கப் போகின்றார்கள்? மானியத் திட்டத்தை அறிவிக்கப் போகின்றார்களா? என கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அரசின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House