
posted 18th March 2022
இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் 25ஆவது வருடாந்த மாநாடு கொழும்பு 10 அல்ஹிதாயா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த வருடாந்த மாநாட்டில் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப் பெரும பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மாநாட்டில் அமைச்சர் அழகப் பெரும ஆற்றி உரையின் தொகுப்பு உங்கள் தாய் மொழியான தமிழில் பேச முடியாதையிட்டு முதலில் மன்னிப்புக் கேட்கிறேன். 22 மில்லியன் மக்கள் உள்ள இரு மொழிகள் பேசுகின்ற இச் சிறிய தீவில் ஊடக அமைச்சராக இருந்தாலும், சகோதர மொழியான தமிழில் பேசமுடியாது. அதேபோல் சகோதர சிங்கள மொழியில் பேச முடியாதவர்களும் இங்கு உள்ளீர்கள். இது வெட்கமான நிலைமையாகும். இதற்கு நானோ எனது பெற்றாரோ எனது பாடசாலையோ காரணமல்ல. பிழையான அரசியல் கொள்கையாளேயே ஏற்பட்டுள்ளது.
பல்லிண, பலமத, பல கலச்சாரங்களை கொண்ட இலங்கையில் நல்லினக்கத்திற்காக பாடுபடும் ஊடக அமைப்பாக முஸ்லிம் மீடியா போரம் விளங்குகின்றது.
தொடர்பாடல் ஊடாக நவீன ஊடக சமூகத்தில் அனுகுமுறை, எண்ணங்கள், பொறுமை, விசாரணை, இன்பம், கௌரவம், மோகம் போன்ற இலக்கின் ஊடாக சிறந்த ஊடக எதிர்காலத்தை நோக்கிச் செல்ல நிபந்தனையின்றி நான் முன்வந்துள்ளேன்.
ஜனநாயக நாடுகளும் பிரிவினைக்கும், இனவாதத்திற்கும் உற்பட்டுள்ளன. கட்சி, கருத்து, கலாச்சார, சமூகபொருளாதார வேறுபாடுகளால் வேறுபட்டு தேசங்கள் நோயுற்று ஒடு ஓடியுள்ளதை ஊடகங்கள் ஊடாகப் பார்க்கிறோம். எந்த தடைகளுக்கு மத்தியிலும் உலகின் பூரண முன்மாதிரியை எமக்கு எடுக்க முடியும். இருண்ட சூழ்நிலைகள் மூலம் பாடம் கற்க முடியும். ஒற்றுமையுடன் ஒன்றாக எழுந்து நிற்பதேயன்றி பிரிந்து நின்று விழாமல் நாட்டை பாதுகாக்க பரஸ்பரம் புரிந்துனர்வுடன் பொறுமையுடன் நடக்க பலக்கிக் கொள்ளவேண்டும்.
இங்கு பிரதான உரை நிகழ்த்திய கலாநிதி எம்.சி. ரஸ்மின், எமது கல்வித்திட்டம் சிறந்த பௌத்தரை,சிறந்த தமிழரை,சிறந்த முஸ்லிம்மை,சிறந்த கத்தோலிக்கரை உறுவாக்குவதே அல்லாமல் சிறந்த இலங்கையரை உறுவாக்குவதில்லை எனக் கூறினார். இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். இங்கு சபையில் உள்ளவர்கள் இதனை மணதில் நிறுத்தி இன்றய கருப்பொருளாக வெளியே எடுத்துச் செல்லவேண்டும். தொடர்பாடல் என்பது எரிபொருளைப் போன்றது. அதனை சரியாகப் பாவித்தால் உரிய அறுவடையை பெறமுடியும். பிழையாகப் பாவித்தால் எம்மை அழித்துக்கொள்ளலாம்.
ஊடகவியலாளர்களுக்கு பொறுப்பு உள்ளன. இந்த எரிபொருளைப் போன்று ஊடத்தை பிரயோகித்து மனிதநேயத்தின் நலனுக்காகவும், இலங்கையின் அடையாளத்தை பாதுகாப்பதற்கும் உபயோகிக்வேண்டும். எதிர்பாராதவிதமாக அரசியலிலும் ஊடத்துறையிலும் இதனை பிழையாக உபயோகிப்பதனால் சகோதர மக்கள் சந்தேகத்திலும் வைராக்கியத்திலும் பார்ப்பதற்கு தூண்டும் நிலமைகள் அன்மைக்காலம் வரை இடம்பெற்றுள்ளன. அதன் பெறுபேராக சகோதர் மக்கள் பிரிவு ஏற்பட்டவர்களாக மணவேதனையுடன் இருப்பதை கவலையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன்.
நாம் நாடென்ற முறையில் முன்நோக்கிச் செல்ல இவை மாற்றப்படவேண்டும். வேறுபாடுகளுக்குப் பதிலாக சமமானநிலை மேலோங்க வேண்டும். இதனை ஏற்படுத்துவது ஊடங்களின் பொறுப்பாகும்.
இஸ்லாமிய சமூகம் நிகழ்காலத்தில் பல்வேறு பேச்சுப்பொருளாக உள்ளார்கள். ஒரு சாராரின் பலக்க வலக்கங்கள், கலாச்சாரங்களுக்கு உற்படுத்திற்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். 2000 வருடங்களுக்கு மேல் சரித்திரமுள்ள இஸ்லாமியர்களை பழங்குடியினர்களாக தோலுரித்துக்காட்டுவதை விமர்சனத்திற்கு உற்படுத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இந்து, அராபிய இலக்கங்களின் ஊடாகவே சகலதும் தீர்மாணிக்கப்படுகின்றன. இந்த இலக்கங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார் என்பதை சற்று சிந்தியுங்கள். றோமன் இலக்கங்களை பயண்படுத்த வேண்டியிருந்தில் எவ்வாறு இருந்திருக்கும்.
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பாக அமைச்சர்களான அலி சப்ரி, நாமல் ராஜபக்ஷ ஆகியோர்களுடன் பேசியுள்ளேன். ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு மீண்டும் இரு அமைச்சர்களுடனும் பேசுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். தங்கம், எரி பொருட்களை விடவும் தரவுகளே உலகின் மிகப் பெறுமதியான சொத்து. விமானங்களை, கப்பல்களை வைத்திருப்பர்களைக் காட்டிலும் தரவுகளின் சொந்தக்காரர்களே செல்வந்தர்கள். தரவுகள் மூலம் பிரஜைகளை பாதுகாக்கவே சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் என்ற முறையில் எமக்கு கடமைகள் பொறுப்புச் சாட்டப்பட்டுள்ளன. இன்று உலகின் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது அரசியலல்ல, ஊடகமே. தற்போதய நவீன ஊடகமே உலகின் அபிப்பிராயங்களை ஏற்படுத்தும் பிரதான மேடையாகும். அதிகாரம் என்பது பாரிய பொறுப்பாகும். எமது பொறுப்பை சரியாகச் செய்யப் பேனையையும், கமரா வில்லையையும் உரிய முறையில் பாவிப்போம். வேறுபடுத்துவதற்குப் பதிலாக ஒன்றுபடுத்துவதற்கு இவற்றை பயன்படுத்துவோம்.
எழுத்துச் சுதந்திரம் என்பது எமது கருத்தை மட்டும் சொல்வதல்ல மற்றயவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வதாகும்.
அரசு என்ற முறையிலும் ஊடக அமைச்சர் என்ற வகையிலும் தணிக்கையல்ல, ஒழுங்குமுறையே எமது கொள்கையாகும்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House