அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு சிறைத் தண்டனை

இலங்கை கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் 2 கட்டங்களாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருடச் சிறைத் தண்டனையுடன் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்து தீப்பளித்துள்ளது.

13 மீனவர்கள் ஒரு படகில் 09 மீனவர்கள் மற்றோரு படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர். அவர்களுள் 13 பேரடங்கிய படகு உடனடியாகவே அரசுடைமையாக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். படகின் உரிமையாளரும் படகில் இருந்தமையால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

09 பேர் பயணித்த படகு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம் 24 திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்தமை, தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடித்தமை, கைதாகும்வரை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஒன்றரை வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு சிறைத் தண்டனை

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House