
posted 2nd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வெற்றி ஈட்டிய உயர்தர பரீட்சை பெறுபேறுகள்
வெளியான க. பொ. த. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 56 மாணவர்களும், வேம்படி மகளிர் கல்லூரியில் 30 மாணவிகளும் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் 21 மாணவர்களும் 3ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர்.
2023ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி 4ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை நடைபெற்றது. இந்தப் பரீட்சையின் பெறுபேறுகள் வியாயனன்று வெளியாகின.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னணி பாடசாலைகள் சில பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் விவரங்கள் வருமாறு,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 56 மாணவர்கள் 3ஏ சித்தியைப் பெற்றனர். இதில் பௌதிக விஞ்ஞான (கணிதம்) பிரிவில் 26 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 23 மாணவர்களும் கலைப் பிரிவில் 5 மாணவர்களும் வணிகவியல் பிரிவில் 2 மாணவர்களும் அடங்குவர்.
பருத்தித்துறை ஹாட்லி
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் 21 மாணவர்கள் 3ஏ சித்தியை பெற்றனர். இதில், பௌதிக விஞ்ஞான (கணிதம்) பிரிவில் 13 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 4 மாணவர்களும் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் ஒரு மாணவனும், உயிரியல் தொழில்நுட்பத்தில் 2 மாணவர்களும் வணிகவியலில் ஒரு மாணவனும் அடங்குவர்.
பருத்தித்துறை மெதடிஸ்
பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் 9 மாணவிகள் 3ஏ சித்தி பெற்றனர். இதில், பௌதிக விஞ்ஞான (கணிதம்) பிரிவில் 3 மாணவிகளும் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3 மாணவிகளும் கலைப் பிரிவில் 3 மாணவிகளும் உள்ளடங்குவர்.
உடுப்பிட்டி அமெரிக்க மிசன்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையில் கணிதப் பிரிவில் ரி. தர்சயன், எஸ். யதுர்சனன், எஸ். சிவசங்கர், ஜே. கோகுலன், உயிரியல் பிரிவில் கயலோன், கலைப்பிரிவில் எஸ். சுஸ்மிதா ஆகிய 6 பேர் 3ஏ சித்தி பெற்றனர்.
யாழ். மத்திய கல்லூரி
யாழ். மத்திய கல்லூரியில் முதல்கட்டமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 3 பேர் 3ஏ சித்தி பெற்றனர். இதில், பௌதிக விஞ்ஞான (கணிதம்) பிரிவில் 2 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞான பிரிவில் ஒரு மாணவரும் அடங்குவர்.
இதேநேரம், யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் 30 மாணவியர் 3ஏ பெறுபேற்றை பெற்றுக்கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)