விழா நாயகிக்கு பாராட்டிக் கௌரவிப்பு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

விழா நாயகிக்கு பாராட்டிக் கௌரவிப்பு

கல்வித் துறையில் 36 வருடங்கள் அளப்பரிய சேவையாற்றிய காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலை அதிபர் திருமதி ஜெஸீமா முஸம்மில்லைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி அறிவியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகவும்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.எம். ஜவாத் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கல்விப் பணியில் 36 வருடங்கள் அளப்பரிய பணியாற்றிய திருமதி ஜெஸீமா முஸம்மில்லின் சேவையைப் பாராட்டி 25 ரூபாய் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது. இம் முத்திரைத் தலையை காத்தான்குடி அஞ்சல் சேவை உத்தியோகத்தர் பிரியாவிடை பெற்றுச் சென்ற விழா நாயகிக்கு வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட மாணவிகளால் வாழ்த்துப்பா மற்றும் நினைவுப் பரிசில்கள் வழங்கிப் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கௌரவிப்பு நிகழ்வில் காத்தான்குடி நகரசபை செயலாளர் திருமதி றிப்கா சபீன், முன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்சா, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

விழா நாயகிக்கு பாராட்டிக் கௌரவிப்பு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)