
posted 1st June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
விபத்தில் பெண் பலி
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியரை பின்னால் வந்த கார் மோதியதில் மனைவி உயிரிழந்தார்.
பண்டத்தரிப்பில் செவ்வாய்க்கிழமை (28) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில், அதே இடத்தைச் சேர்ந்த அல்பேர்ட் வில்லியம் சரோஜினிதேவி (வயது 61) என்பவரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
உயிரிழந்த பெண் கடந்த சில நாட்களாக சுகவீனமடைந்திருந்தார். செவ்வாய்க்கிழமை அவரை கணவர் சைக்கிளில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கிருந்து இருவரும் திரும்பியவேளை பின்னால் வந்த கார் அவர்களை மோதியது. இதில், பெண் படுகாயமடைந்தார். தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கணவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)