வடக்கு வருகிறார் பிரதமர் தினேஷ்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வடக்கு வருகிறார் பிரதமர் தினேஷ்

பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அடுத்த வாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளார்.

பிரதமரின் வடக்கு வருகை தொடர்பான நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்றை சூம் செயலி ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதமரின் மகனுமான யதாமினி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் கலந்து கொண்டனர்.

முன்பதாக உஸ்ஸட்டகெய்யாவ , தல்தியாவ பகுதியில் அமைந்துள்ள முகத்துவாரப் பிரதேசத்தை ஆழப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அப்பிரதேச கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இக் கலந்துரையாடலின் போது குறித்த இறங்குதுறையை உடனடியாக ஆழப்படுத்தும் பணிகளை ஆரம்பிக்கவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

இச்சந்திப்பின்போது அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நாரா நிறுவனத்தின் பணிகளின் சமகால முன்னேற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடல் நடைபெற்றது.

குறிப்பாக சாலை, முல்லைத்தீவு, நந்திக்கடல் , நாயாறு, சுண்டிக்குளம் , அறுகம்பே , மட்டக்களப்பு , சிலாபம் , புத்தளம் , கொக்கல களப்புகளின் ஆழப்படுத்தல் மற்றும் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மீன் குஞ்சுகள், இறால் குஞ்சுகளை வைப்புச் செய்தல் போன்ற செயல்பாடுகளுக்கான ஆராய்வுகள், மதிப்பீடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

வடக்கு வருகிறார் பிரதமர் தினேஷ்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)