
posted 18th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வடக்கில் கடலட்டை உற்பத்தி அபரிமித வளர்ச்சி அடைந்தது
வடக்கில் கடலட்டை உற்பத்தி அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடலட்டை பண்ணையாளர்களுடன் நேற்று (17) திங்கள் அமைச்சர் நடத்திய சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
கடலட்டை தொடர்பான தொழிலில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கடலட்டை குஞ்சு உற்பத்திக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சீன நிறுவனமும் வெளியேற்றப்பட்டுள்ளது. தற்போது, 100 வீதம் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர்களே ஈடுபடுகிறார்கள். எமது மக்களே எமது பிரதேசங்களின் வளங்களைப் பயன்படுத்தி உச்ச பயன்களைப் பெறவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)