
posted 14th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்
மே 2ஆம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று (14) வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
சம்பள முரண்பாடு, எம்.சி.ஏ கொடுப்பனவு அதிகரித்து வழங்குதல் போன்ற பல நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பேரணியாக வந்து பிரதான வாயிலில் கவனயீர்ப்பு போராட்டமாக இடம்பெற்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)