
posted 4th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மூன்றாண்டு திட்ட முன்மொழிவு கலந்துரையாடல்
மாவட்ட திட்டமிடச் செயலகத்தின் ஏற்பாட்டில் மூன்றாண்டு திட்ட முன்மொழிவு கலந்துரையாடல் இன்று (04) செவ்வாய் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் திட்டமிடல் செயலத்தினால் மூன்றாண்டு திட்ட முன்மொழிவு கலந்துரையாடல் மாவட்ட திறன் விருத்தி ஒன்று கூடல் மண்டபத்தில் பதில் அரசாங்க அதிபர் முரளிதரன் தலைமையில் இடம் பெற்றது.
மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான திட்டமிடல்கள், நடந்து முடிந்த அபிவிருத்தி திட்டங்கள், நடக்க இருக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள், மூன்று ஆண்டுக்கான விசேட வேலை திட்டங்கள் போன்றவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றமை தொடர்பான திட்ட முன்மொழிவு கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயம்.
இத் திட்டம் முன்மொழிவு கலந்துரையாடலில் ஏனைய திணைக்கள அதிகாரிகள், மாவட்ட திட்டமிடல் செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் சமூர்த்தி உத்தியோகத்துள்ளனர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)