
posted 24th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மு.கா பேராளர் மாநாட்டில் கைகலப்பு; விசாரணைக் குழு நியமனம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் விசேட குழுவொன்றை நியமித்திருப்பதாக கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி. சமால்டீன் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை (22) காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 31 ஆவது பேராளர் மாநாடு நடைபெற்றது. இதன்போது சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த கட்சியின் இரு ஆதரவாளர் குழுக்களுக்களிடையே கைகலப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததுடன் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாணைகளை ஆரம்பித்து, அது தொடர்பான அறிக்கையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ரவூப் ஹக்கீம் குறித்த விசாரணைக் குழுவினரைப் பணித்துள்ளார்.
கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் கட்சியின் பிரதித் தலைவருமான கலாநிதி ஹிஸ்புல்லா ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)