
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மந்திகையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
அரச புலனாய்வு சேவையின் தகவலுக்கமைய கேரள கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கற்கோவளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் 02kg 300g கேரள கஞ்சாவுடன் மந்திகை பகுதியில் வைத்து நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடும் குறித்த நபர் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவினர்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த அரச புலனாய்வு பிரிவினர் இன்றைய (13) தினம் வியாழக்கிழமை விற்பனை நோக்கத்திற்காக கஞ்சாவை கொண்டு செல்லும் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் நெல்லியடி பொலீஸார் பருத்தித்துறை நீதி மன்றில் முற்படுத்தப்படுத்தவுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)