
posted 22nd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி விக்ரமசிங்க, அதன் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன், புனரமைப்புப் பணிகளைப் பூர்த்தி செய்ய இலங்கை இராணுவத்தின் உடனடி உதவியை வழங்குமாறு இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி பணிபுரை விடுத்தார்.- PMD
PMD_PR0622#02
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்துள்ளார்.
தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் இதுவரை ஏன் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது குறித்து உடனடியாக ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், தேவாலயத்தின் திருத்தப் பணிகளை ஜனாதிபதி அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் துரிதமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அந்த நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவத்தின் ஆதரவை வழங்குமாறும் ஜனாதிபதி இராணுவத் தளபதிக்கு பணிப்புரை விடுத்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனும் இச்சத்தர்ப்பத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
அசல்படிவத்தினைப் பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்>>>>>சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள்
President Wickremesinghe visited the Zion Church, Batticaloa, which was damaged in the Easter Sunday attacks & instructed officials to submit a report on the delays in its renovations. He directed the Army Commander to provide immediate assistance from the Sri Lanka Army to complete the repairs, with funding assistance from the Presidential Secretariat - PMD
Read the original document, click here>>>>>President Inspects Restoration work of Zion Church
පාස්කු ඉරිදා ප්රහාරයෙන් හානියට පත් මඩකලපුව සියොන් දේවස්ථානයේ නිරීක්ෂණ චාරිකාවක නිරත වූ ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා එහි ප්රතිසංස්කරණ කටයුතු ප්රමාද වීම පිළිබඳ වාර්තාවක් ලබාදෙන ලෙස නිලධාරීන්ට උපදෙස් දුන්නේය. එමෙන්ම ජනාධිපති ලේකම් කාර්යාලයේ ප්රතිපාදන මත දේවස්ථානයේ අලුත්වැඩියා කටයුතු කඩිනමින් අවසන් කිරීම සඳහා ශ්රී ලංකා යුද හමුදාවේ සහය ලබා දෙන ලෙස ද ජනාධිපතිවරයා මෙහිදී යුද හමුදාපතිවරයා වෙත උපදෙස් දුන්නේය – PMD

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)