பெண்ணுக்கு தீ மூட்டி எரித்து கொன்ற காதலன் - யாழ்ப்பாணத்தில் நடந்த குரூரம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பெண்ணுக்கு தீ மூட்டி எரித்து கொன்ற காதலன் - யாழ்ப்பாணத்தில் நடந்த குரூரம்

யாழ்ப்பாணம் குருநகரில் சேமக்கலை ஒன்றில் காதலனால் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேநேரம், அவரை தீ மூட்டி எரித்தார் என்று கூறப்படும் 40 வயதான காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரியை சேர்ந்த இரத்தினவடிவேல் பவானி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த பெண் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக கணவரை அவர் பிரிந்து வாழ்கிறார்.

இந்த நிலையில், வேறு ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அந்த சேமக்கலை அருகிலேயே சந்தித்துப் பேசி வருவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் பெண்ணுக்கு தீ மூட்டிய காதலனான சநதேகநபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது, சந்தேகநபர் திடீரென பெண்ணின் மீது பெற்றோலை ஊற்றி தீயிட்டுள்ளார்.

பெண்ணின் அபயக்குரல் கேட்டு அங்கு ஓடி வந்தவர்கள் தீயை அணைத்து அவரை யாழ். போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (01) சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர், அந்தப் பெண்ணை கொல்லும் நோக்குடன் திட்டமிட்டே வந்தார் என்று விசாரணையில் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணுக்கு தீ மூட்டி எரித்து கொன்ற காதலன் - யாழ்ப்பாணத்தில் நடந்த குரூரம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)