
posted 9th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
புதையல் தேடிச் சென்றனரா? புதிர் எடுக்கப் போனார்களா?
தமிழீழ விடுதலைப் புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று முன் தினம் இரவு இடம் பெற்றுள்ளது. நேற்று முன் தினம் வெள்ளிஇரவு 10.30 மணியளவில் புதையல் தேடியவர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப் புலிகளின் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது 2 இலத்திரனியல் ஸ்கானர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர், மற்றும் தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கைதானவர்கள் இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)