
posted 2nd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
புதிய நேர அட்டவணையுடன் நயினாதீவு - குறிகாட்டுவான் படகு சேவை
நயினாதீவு-குறிகாட்டுவான் படகுச் சேவை 1ஆம் திகதி ஆனிமாதம் சனிக்கிழமை தொடக்கம் புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ளார்.
நயினாதீவு - குறிகாட்டுவான் இடையேயான படகுச் சேவை காலை 6.30 முதல் மாலை 5.30 மணிவரை 30 நிமிடத்திற்கு ஒருமுறை வழங்கும்.
மற்றும் குறிகாட்டுவான் - நயினாதீவு இடையேயான படகுச் சேவை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நயினாதீவு நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)