
posted 17th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பாதயாத்திரை குழுவினர் அம்பாறைக்குள் பிரவேசம்
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி - கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் 35ஆவது நாளில் இயந்திரப் படகுப் பாதையில் பயணித்து களுவாஞ்சிக்குடி ஊடாக அம்பாறை மாவட்டத்தை அடைந்துள்ளனர்.
மண்டூர் - குறுமண்வெளி இயந்திரப் படகுப் பாதையில் பாதயாத்திரை குழுவினர் பயணித்தனர்.
சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கடந்த மாதம் 11 திகதி புறப்பட்ட கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் 35 நாட்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கடந்து சனிக்கிழமை (15) ஆறாவது மாவட்டமான அம்பாறை மாவட்டத்துக்குள் பிரவேசித்தனர்.
கடந்த புதன்கிழமை இரவு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் தரித்து நின்ற பாதயாத்திரை குழுவினர் காலை மண்டூர் - குறுமண்வெளி ஆற்றை பாதையால் கடந்துவந்து களுவாஞ்சிக்குடியை அடைந்தனர் .
கல்லாறு கடலாச்சி அம்மன் ஆலயத்தை தரிசித்து இரவு பெரிய நீலாவணை நாககன்னி ஆலயத்தில் நின்றனர். பின்னர் கல்முனை ஊடாக காரைதீவு சிறீ கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர்.
எதிர்வரும் 29ஆம் திகதி உகந்த மலையை அடையவுள்ள இந்த பாதயாத்திரை குழுவினர் 30ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டதும் காட்டுக்குள் பிரவேசிக்கவுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)