
posted 19th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பாதயாத்திரை குழுவினருக்கு பழரசம் வழங்கிய முஸ்லிம் மக்கள்
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி - கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் 37ஆவது நாளில் அட்டாளைச்சேனையில் பயணித்தபோது முஸ்லிம்கள், பாதயாத்திரை குழுவினருக்கு பழரசம் வழங்கினார்கள்.
மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு பாதயாத்திரை குழுவினர் தரிசனம் செய்தனர்.
அங்கு ஆலய பரிபாலன சபைத் தலைவர் கி. ஜெயசிறில் குடும்பத்தினர் அடியவர்களுக்கு காலை ஆகாரம் வழங்கினர்.
மேலும் பல அடியவர்களுக்கு பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற இடங்களில் சென்று காலை ஆகாரம் வழங்கப்பட்டது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)