
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம்வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த எட்டாம் தேதி விடுதி இலக்கம் 7 இலக்க விடுதியில் நுழைந்து அங்கு கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று திங்கட்கிழமைமதியம் 12 மணி முதல் ஒரு மணிவரையன தமது உணவு வேளையில். வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் சிற்றூழியர்கள், தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
உத்தியோகத்தர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்து, ஆயுதம் தாங்கிய பொலீஸாரை கடமையில் ஈடுபடுத்து, சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய், போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சுமார் நூறு வரையான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)