
posted 24th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நெடுந்தீவு இளைஞர் கொலை; தேடப்பட்டு வந்தவர்கள் கைது
நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்களும் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவில் கடந்த வியாழக்கிழமை (13) அதிகாலை ஒரு மணியளவில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
இவருடன், கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூவர் தலைமறைவாகினர். இவர்களை, பொலிஸாரும், இளைஞரின் உறவினர்களும் தேடி வந்தனர்.
தலைமறைவான மூவரும் நெடுந்தீவில் பற்றைக்குள் மறைந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (22) கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கைதான மூவரும் நேற்று முன்தினம் இரவே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக கொண்டு வரப்பட்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)