
posted 12th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நாகதம்பிரான் ஆலய பஞ்சதள இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா
சரித்திரப்பிரசித்தி பெற்ற வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பஞ்சதள இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(16) இடம்பெறவுள்ளது.
காலை 10 மணி முதல் 11 மணி வரை உள்ள சுப வேளையில் 1008 சங்குஸ்தாபனம் நிகழ இருப்பதனால் அடியார்கள் தங்கள் கைகளால் சங்கு ஸ்தாபனம் செய்து நாகதம்பிரானின் திருவருளைப் பெற்றுமாறு வேண்டப்படுகின்றனர்.
காலை ஐந்து முப்பது மணிக்கு விநாயகர் வழிபாடு இடம் பெற்று அனுக்சை, கணபதி ஹோமம், வஸ்து சாந்தி சங்கு பூஜை இடம்பெற்று காலை 10 மணி முதல் சங்கு ஸ்தாபனம் ஆரம்பமாகி நடைபெறும்.
அடியார்கள் தாங்கள் கைகளினால் சங்கு ஸ்தாபனம் செய்ய விரும்பின் பத்தாயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கி சங்கு ஸ்தாபனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)