
posted 14th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நல்லிணக்க ஒருங்கிணைப்புக்கு சர்வமத தலைவர்கள் நியமனம்
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் சர்வமதத் தலைவர்களான சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவ சிறீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா உள்ளிட்டோர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை வலுப்படுத்தல். சகல இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புதல் என்பவற்றை நோக்கி அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வமத நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்படுத்தலுக்காக இந்த அமைச்சுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள செயல்பணிகளை ஒருங்கிணைத்தல் இப்பதவியின் பிரதான இலக்கு மற்றும் செயல்பணிகளாகும் என்று நியமனக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)