
posted 23rd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நண்பன் வீட்டில் கைவரிசை காட்டிய இருவர் கைதாகினர்
நண்பனின் வீட்டில் களவாடிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், களவு போன சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளையும் பொலிஸார் மீட்டனர்.
கிளிநொச்சி - உதயநகரில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
உதயநகர் மேற்கிலுள்ள வீட்டுக்கு உரிமையாளரின் மகனுடன் நண்பர்கள் இருவர் அடிக்கடி வருவது வழமையாக இருந்தது. கடந்த 16ஆம் திகதி அன்று வீட்டு உரிமையாளர்கள், வீட்டில் வைத்த நகையை தேடிய போது நகைகள் காணாமல் போனமை தெரிய வந்தது.
இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
விசாரணை நடத்திய பொலிஸார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இக் களவு தொடர்பாக கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)