
posted 21st June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நடைபாதை வியாபாரத்தை உடனடியாகத் தடை செய்க
திருகோணமலை நகரில் நடைபாதை வியாபாரத்தை தடைசெய்ய கோரி திருகோணமலை பொதுச் சந்தை வியாபாரிகள் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியற்ற நடைபாதை வியாபாரத்தை உடனடியாக நிறுத்த அரச உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோசங்களை எழுப்பினர். தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளித்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)