தியாகத்திருநாள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தியாகத்திருநாள்

ஈதுல் அழ்ஹா எனப்படும் தியாகத்திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு இலங்கை முஸ்லிம்கள் தயாராகிவருகின்றனர்.

இலங்கையில் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட் கிழமை ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் முஸ்லிம் பிரதேசங்களில் பெருநாள் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியிருந்தன.

குறிப்பாக முஸ்லிம் மக்கள் பெருபான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் எங்கும் ஹஜ்ஜுப் பெருநாளை குதூகலமாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இப்பிரதேசங்களில் ஜவுளி வியாபாரம் மற்றும் பெருநாளுக்கான உணவுப் பொருட்கள் வியாபாரம் என்பன களைகட்டியிருந்த நிலையில் தற்சமயம் இறுதிக்கட்டரெடிமேட் (தைத்த ஆடைகள்) ஆடைகளைக் கொள்வனவு செய்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இதற்கென தென் பகுதியிலிருந்து பெருமளவு அங்காடி வியாபாரிகள் கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களுக்குப்படையெடுத்துள்ளனர்.

இதேவேளை வழமைபோன்று இம்முறையும் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையை பள்ளிவாசல்களிலும், விசேடமாக திடல் தொழுகையாகவும் நிறைவேற்றுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் முஸ்லிம் பிரதேசங்களில் செய்யப்பட்டுள்ளன.

பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையப் பிரதேசங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காணப்படும் நிலையில் பெருநாள் களியாட்ட நிகழ்வுகள், கவியரங்குகள் என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இம்முறை இரண்டு மில்லியனுக்கும் அதிகமான யாத்திரீகர்கள் சவூதி அரேபியாவின் மக்காவில் திரண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக உலகெங்குமிருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக விமான மார்க்கமாக மக்காவை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தியாகத்திருநாள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)