
posted 17th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தாதியர், காவலாளித் தாக்குதல்
தாதியர், காவலாளி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டார்.
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் செயற்பட்டு வரும் ஏழாம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் தரப்பில் இருந்து கடந்த சனிக்கிழமை(08) இரவு வைத்தியசாலைக்குள் அத்துமீறிப் புகுந்தவர்கள் நோயாளியை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றவில்லை என கூறி தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் அங்கு கடமையில் இருந்த தாதியர் மற்றும் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து, தாதியர் ஒருவரையும் காவலாளி ஒருவரையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
இச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், குறித்த அடாவடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலை தரப்பினரால் கடந்த 10 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த மூவரை பருத்தித்துறை பொலிசார் கைதுசெய்து நேற்று முன்தினம் (15) சனிக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்பட்டுத்தியிருந்தனர். மூவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)