தரமுயரும் கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலை

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தரமுயரும் கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலை

கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக ஆராய்ந்தார்.

கண்டாவளை, விசுவடு பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவு மக்கள் பயன்படுத்தும் தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையை தரமுயர்த்தி தருமாறு குறித்த வைத்தியசாலையின் நலன்புரிச்சங்கம் மற்றும் பொது அமைப்புக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அதற்கு அமைவாக இன்றைய தினம் (01) சனிக் கிழமை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையின் நிலைமையை நேரில் பார்த்து வைத்தியசாலை தரப்பினருடன் கலந்துரையாடிருந்தார்.

C தரமாக விளங்கும் குறித்த வைத்தியசாலையை B தரத்து மாற்றி வைத்தியசாலைக்கான வளங்களை ஏற்படுத்தி தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் போது அமைச்சர் தெரிவிக்கையில் தர்மபுரம் வைத்தியசாலையில் இனிவரும் காலங்களில் குருதி பரிசோதனைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இவ் வைத்தியசாலையில் திடீர் விபத்துக்கள், திடீர் மரணங்கள் என்பனவற்றுக்கு உடனடி தீர்வு காண்பதற்காக விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இவ் வைத்தியசாலையில் வைத்தியசாலையில் பொலிஸ் பிரிவு ஒன்றை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்பொழுது வைத்தியசாலையில் சமையல் பகுதியில் உரிய நேரத்தில் நோயாளர்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்பதற்காக சமையலாளர் ஒருவரை நியமிக்குமாறும் அதற்கான சம்பளத்திற்காக தனது சொந்தப் பணத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், தற்பொழுது C தரத்தில் உள்ள இவ்வைத்தியசாலையை B தரத்துக்கு தரமுயரத்தி மக்கள் இலகுவான முறையில் சிகிச்சைகளை பெறக்கூடிய வசதிகளை அமைத்து தருவதற்கு தாம் நடவடிக்கை மேற்கொள்ளவதாகவும் இதன் போது அவர் தெரிவித்தார்.

தரமுயரும் கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)