
posted 29th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகங்களை நிறுத்துக
திருகோணமலை, மூதூரில் தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேறும் அராஜகங்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர், சட்டத்தரணி க. சுகாஷ் தெரிவித்தார்.
மூதூரில் மதுபானசாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது இரவோடிரவாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தொடர்ச்சியாக மூதூர் பொலிஸார் இரவு வேளைகளில் திட்டமிட்டு இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இரவுவேளை என்பதால் ஆதாரமின்றி முறைகேடுகளில் ஈடுபடுவதும், அச்சுறுத்துவதும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட மனித உரிமை மீறலாகும்.
எனவே, தமிழ் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மதுபானசாலை மூடப்பட வேண்டும் என்றும் சுகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)