
posted 10th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் அரசு எதிராக பிரசாரம் செய்யும் - சுமந்திரன்
தமிழ் பொது வேட்பாளர் என்ற கோமாளிக்கூத்துடன் எமக்கு உடன்பாடில்லை. இதற்கெதிராக மக்கள் மத்தியில் இலங்கை தமிழ் அரசு கட்சி பிரசாரம் செய்யும் என, அந்தக் கட்சியின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் தரப்பினரின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் “ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அரசியல் கருத்துக் களத்தில் உரையாற்றியபோதே சுமந்திரன் எம். பி. இவ்வாறு கூறினார்.
அவர் தனது உரையில்,
“பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே, அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். சிவில் சமூகக்குழுக்கள் ஏதாவது ஆலோசனை சொல்லலாமே தவிர, அரசியல் முடிவுகள் எடுப்பதற்கான மக்கள் ஆணையை பெறாதவர்கள் என்றும் கூறினார்.
சீ. வீ. கே. சிவஞானம் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ் அரசு தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந. சிறீகாந்தா, செயலாளர் எம். கே. சிவாஜிலிங்கம், சமத்துவ கட்சியின் தலைவர் மு. சந்திரகுமார், இமானுவல் அடிகளார், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன். பாலசுந்தரம்பிள்ளை எனப் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)