
posted 12th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் டொக்டர் கே.சுபாஷினி அவர்களை கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஜேர்மனி பிராங்பேர்ட் நகரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின் போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் உலக அளவில் தமிழ் விரிவாக்கத்தின் வரலாறு தொடர்பான "தமிழர் புலப்பெயர்வு" நூலை டொக்டர் கே.சுபாஷினி ஆளுநருக்கு வழங்கி வைத்தார்.
மேலும் இலங்கையில் பெருந்தோட்ட சமூகத்தின் 200வது வருடத்தின் முதல் நினைவு முத்திரையையும் ஆளுநரால் டொக்டர் கே.சுபாஷினிக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன்,ஜேர்மனி பிராங்பேர்ட் நகரில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)