
posted 16th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பான காலத்தின் தேவை குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று ஞாயிற்றுக் கிழமை (16) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பான காலத்தின் தேவை குறித்து தமிழர் பொதுக் கட்டமைப்பு கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூகத்தினரை அழைத்து கலந்துரையாடினர்.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் தற்போது நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பேராசிரியர் ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன், அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கம், மாவட்டத்தின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது பொதுவேட்பாளர் தொடர்பாக பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் தமது கருத்தினை தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)