
posted 18th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சுகாதார நிலையங்களைத் திறந்து வைத்த செந்தில் தொண்டமான்
16 மில்லியன் ரூபா செலவில் சுகாதார நிலையத்தை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்!
மூதூர் பெரியபாலத்தில் 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமோதய சுகாதார நிலையத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்ததுடன், மக்கள் பாவனைக்காக கையளித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அதுகோரல உட்பட அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.
20 மில்லியன் ரூபா செலவில் அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்!
திருகோணமலை செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்ததுடன், மக்கள் பாவனைக்காக கையளித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல உட்பட அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)