
posted 4th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சீனக்குடாவில் கோலாகலமான வரவேற்பு
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் சந்நிதி - கதிர்காம ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினருக்கு திருகோணமலை சீனக்குடாவில் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டம் சார்பாக அங்கு சென்ற காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில், பாதயாத்திரை குழுவின் ஆலோசகர் வி. ரி. சகாதேவராஜா ஆகியோர் வரவேற்பளித்தனர்.
கடந்த 11ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பித்த இந்த பாதயாத்திரை தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
89 அடியவர்கள் இந்தப் பாதயாத்திரை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)