சாய்ந்தமருது கலாசார நிலையத்தில் வாசிகசாலை

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சாய்ந்தமருது கலாசார நிலையத்தில் வாசிகசாலை

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் விரைவில் வாசிகசாலை ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தெரிவித்தார்.

இதற்காக புத்தகங்களை அன்பளிப்பு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

இந்த வாசிகசாலையை கலாசார மத்திய நிலைய மாணவர்களுடன் பாடசாலை மாணவ, மாணவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் என சகல தரப்பினரும் பயன்படுத்த முடியும்.

இலங்கை தேசிய நூலகம் 2024 ஆம் ஆண்டுக்கான ஒக்டோபர் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு "உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" என்ற கருத்திட்டத்திற்கு அமைவாக கலாசார மத்திய நிலையங்களின் வாசிகசாலைகளை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு அமைவாகவே சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்திலும் வாசிகசாலை ஒன்றை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக புத்தக சேகரிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டின் எப்பாகத்திலும் உள்ள எழுத்தாளர்கள், கலை, இலக்கியவாதிகள் மற்றும் நலன் விரும்பிகள் இந்த வாசிகசாலைக்கு புத்தகங்களை அன்பளிப்புச் செய்யுமாறு வேண்டுகின்றோம்.

புத்தகங்களை அன்பளிப்புச் செய்ய விரும்புவோர் 077 758 0663 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என்பதுடன் நிலையைப் பொறுப்பதிகாரி, கலாசார மத்திய நிலையம், பொலிவேரியன் கிராமம், சாய்ந்தமருது - 16 எனும் முகவரிக்கு புத்தகங்களை அனுப்பி வைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

சாய்ந்தமருது கலாசார நிலையத்தில் வாசிகசாலை

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)