
posted 11th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சாதனை மாணவி வஜீனாவை நேரில் சென்று வாழ்த்திய வடக்கு பொலிஸ் மா அதிபர்
வெளியாகிய 2023 ஆம் ஆண்டுக்கான காப்பத உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் கலைப்பிரிவில், வஜீனா பாலகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட நிலையில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய கிராமமான சாந்தை பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பமும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட ஒரு குடும்பமாக காணப்படுகின்றது. கல்வி கற்பதற்கு கூட அவரது வீட்டில் ஒரு மேசை இருந்திருக்கவில்லை. இவ்வாறான குடும்பப் பின்னணியிலேயே குறித்த மாணவி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கான பாராட்டு விழா வெள்ளிதினம் (07) சாந்தை சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. அந்த வகையில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.திலக் சி.ஏ. தனபால அவர்கள் குறித்த பகுதிக்கு நேரில் சென்று தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அவர்கள் புதிதாக நியமனம் பெற்று வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளார். அவர் தனது பதவிக்கு அப்பால் அங்கிருந்த மக்களுடன் மிகவும் சகஜமாக பழகுவதை அவதானிக்க முடிந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)