
posted 21st June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகள் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (20) வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டன. அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் 30 வயது நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட மரக்குற்றிகள் சுமார் 20 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, சந்தேக நபர் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளார்.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் அஜந்த பெரேரா அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண குழுவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)