
posted 2nd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சங்கிலியனின் 405ஆவது சிரார்த்த தினம்
யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி சைவத் தமிழ் மன்னன் 2ஆம் சங்கிலியனின் 405ஆவது சிரார்த்ததின அனுஷ்டிப்பும், நினைவு தின விழாவும் வியாழனன்று (30) யாழில் இடம்பெற்றது.
இலங்கை சிவனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தம் தலமையில் யாழ் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சங்கிலிய மன்னன் சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன் நிகழ்வில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவர் ஆறுதிருமுருகன், யாழ் மாநகர ஆணையாளர், சமய பெரியோர்கள், வர்த்தகர்கள் ஊர் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சங்கிலிய மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து யமுனா ஏரியிலும் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஜமுனைநதி தீர்த்தமும் தெளிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)