
posted 7th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கைதடியில் தொடர்ந்துவரும் அரச சாரதிகள் போராட்டம்
வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம், கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் முன்பாக தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றது.
வடக்கு மாகாணத்தில் 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்துக்கு பிரதிப் பிரதம செயலாளரால், கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்றப் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.
ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய பின்னர் அந்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த அரச சாரதிகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்தனர்.
அதனைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட இடமாற்றம், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி பிரதமர் செயலர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், குறித்த திகதி வரை இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அரச சாரதிகள் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் முன்பாக இவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)