கூடைப்பந்தாட்டத்தின் ஊடாக இளைஞர்கள் அபிவிருத்தி

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கூடைப்பந்தாட்டத்தின் ஊடாக இளைஞர்கள் அபிவிருத்தி

ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி வரையான காலப்பகுதிக்கு இலங்கைக்கு வருகைதரும் அமெரிக்க விளையாட்டுத் தூதுவர்களான, தேசிய கூடைப்பந்தாட்ட சங்கம் (NBA) மற்றும் பெண்கள் தேசிய கூடைப்பந்தாட்ட சங்கம் (WNBA) ஆகியவற்றின் முன்னாள் வீரர்களான ஸ்டீபன் ஹொவர்ட் மற்றும் அஸ்டோ என்ஜாய் ஆகியோரை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையுடன் வரவேற்கிறது. Foundation of Goodness மற்றும் IImpact Hoop Lab ஆகியவற்றுடனான ஒத்துழைப்பின் காரணமாக சாத்தியமாகிய, பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் விளையாட்டின் சக்திகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு வார கால கூடைப்பந்தாட்ட நிகழ்ச்சித்திட்டத்தை அமெரிக்கத் தூதரகத்தின் பொது இராஜதந்திரப் பிரிவு ஆரம்பிக்கும்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஓய்வுபெற்ற தொழில்முறை கூடைப்பந்தாட்ட வீரர்களான திரு. ஹொவர்ட் மற்றும் திருமதி. என்ஜாய் ஆகியோர் “ஹூப்ஸ் போஃர் ஹோப் கூடைப்பந்தாட்டத்தின் மூலம் எல்லைகளை இணைத்தல்” எனும் ஒரு வாரகால கூடைப்பந்தாட்ட நிகழ்ச்சியை நடத்துவார்கள். கூடைப்பந்தாட்ட ஆலோசனை முகாம்கள் மற்றும் கண்காட்சிப் போட்டிகளுக்கு விளையாட்டுத் தூதுவர்கள் தலைமை தாங்குவதுடன் கொழும்பு மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெறும் வடக்கு, ஊவா, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்த 14-18 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் பங்குபற்றும் தலைமைத்துவ அமர்வுகளிலும் கலந்துகொள்வர். இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம், தேசிய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களுடன் தமது நிபுணத்துவத்தை அமெரிக்காவின் விளையாட்டுத் தூதுவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். கூடைப்பந்தாட்ட ஆலோசனை முகாம்களுக்கு அப்பால் இலங்கை பாடசாலை மாணவர்களுடன் இணைந்து கொழும்புப் பகுதியில் மேற்கொள்ளப்படும் ஒரு சமூக சேவை செயற்திட்டத்திலும் அவர்கள் பங்கேற்பர்.

“அமெரிக்க மற்றும் இலங்கை மக்களுக்கிடையில் காணப்படும் வலுவான மக்கள் தொடர்புகளை மேலும் கட்டியெழுப்புவதற்கு வருகை தந்திருக்கும் இலங்கைக்கான எமது விளையாட்டுத் தூதுவர்களாக ஸ்டீபன் மற்றும் அஸ்டோவை வரவேற்பதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம்” என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். “தொடர்பாடல், குழுப்பணி, மீண்டெழும்தன்மை, அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் பிணக்குகளைத் தீர்த்தல் போன்ற விடயங்களில் எமது விளையாட்டுத் தூதுவர்கள் பகிர்ந்து கொள்ளும் பாடங்கள் தலைமைத்துவ மேம்பாடு, சமூகத்தை கட்டியெழுப்புதல், சமத்துவம் மற்றும் அமைதி ஆகியவற்றிற்கு மிக அவசியமானவையாகும். அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் விளையாட்டு ஒரு சக்திவாய்ந்த கருவியாக அமையும் எனும் எமது நம்பிக்கைக்கு இந்த அமெரிக்க விளையாட்டு தூதுவர்கள் நிகழ்ச்சித் திட்டம் ஒரு சான்றாகும்.

கூடைப்பந்தாட்டத்தின் ஊடாக இளைஞர்கள் அபிவிருத்தி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)