
posted 15th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
குறிகட்டுவானில் கரையொதுங்கிய சடலம்
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிகாட்டுவான் கடற்பரப்பில் சடலம் ஒன்று நேற்று (14) வெள்ளிக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலமானது ஆண் ஒருவருடையது. இருப்பினும் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை. சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது.
குறித்த சடலமானது மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)