
posted 12th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்
கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் தரம்-1 அதிகாரியான இவர் முறையே பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளராகவும் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளராகவும் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளராகவும் அதன் பதிவாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இறுதியாக கல்முனை மாநகர ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் இலங்கை நிர்வாக சேவையில் இரு தசாப்த காலத்தை பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)