
posted 11th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
*கிழக்கு ஆளுநர் இந்தியப் பிரதமருக்கு வாழ்த்து*
இந்தியாவின் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று, மூன்றாவது முறை இந்தியப் பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்திய மக்களுக்காக பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவை பொருளாதார ரீதியில் வலுவான ஒரு நாடாக கட்டியமைத்துள்ளார்.
அதேபோல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது இந்திய அரசு கடன் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி இலங்கைக்கு கைகொடுத்துள்ளது. மேலும், வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது.
இந்தியாவில் 3ஆவது முறையாக ஆட்சி அமைத்து மீண்டும் அதிகாரத்தில் அமர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
உலகத்தின் வலிமை மிக்க தலைவராகவும் அவர் மாறியுள்ளார் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)