
posted 25th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கல்லடியில் சர்வதேச யோகா தினம்
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா மனித வள மேம்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் கல்லடி சிவானந்த வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சிறீ மத் சுவாமி நீலமாதவானந்தா முன்னிலையில் இந்த நிகழ்வு காலை 6 மணி முதல் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சனி முகுந்தனும், சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் இரா. முரளீஸ்வரன் கலந்து சிறப்பித்தனர்.
இந்த யோகா பயிற்சியினை பயிற்றுவிப்பாளர்களான சிவலிங்கம் சிறீதரன், அழகுராஜா ஜெயகரன் ஆகியோர் நடத்தினர்.
சுமார் 250 பேர்கள் யோகா பயிற்சியினை காலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை சூரிய ஒளியில் பெற்றனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)