
posted 8th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கதிர்காமத்துக்கான காட்டுப் பாதை 30ஆம் திகதி திறப்பு
வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் திருவிழாவுக்கு செல்லும் பாத யாத்திரிகர்களுக்கான உகந்தை காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இந்தக் காட்டுப் பாதை எதிர் வரும் ஜூலை 11ஆம் திகதி மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னர், இந்தக் காட்டுப் பாதை ஜூலை 1ஆம் திகதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
எமது செய்திகளை youtubeலும் பாருங்கள், பகிருங்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)